சந்தானம், சுரபி, மசூம் சங்கர், பிரதீப் ராவத், மாறன், கிங்ஸ்லி, ஃபெஃப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், பிபின், தீனா, சேது, தங்கதுரை, தீபா, மானஸ்வி, ரீட்டா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், டிடி ரிட்டர்ன்ஸ்.
டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை RK Entertainment சார்பில், சி. ரமேஷ்குமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.
பிரதீப் ராவத், பாண்டிச்சேரியில் மிகப்பெரிய ‘கேஸினோ’ சூதாட்ட கிளப்பினை நடத்தி வருகிறார். இதில் விளையாடச் செல்பவர்கள் மாயமாக மறைகின்றனர். இதனால் மக்கள் அந்த சூதாட்ட கிளாப்பினை அடித்து நொருக்கி தீ வைக்கின்றனர். இதானல் பிரதீப் ராவத்தின் குடும்பம் முழுவதும் பலியாகிறது.
பல வருடங்கள் சென்ற நிலையில், சந்தர்ப்ப வசத்தால் சந்தானம், பாழடைந்து கிடக்கும் அந்த சூதாட்ட கிளப்பிற்குள், நண்பர்களுடன் நுழைகிறார். அப்போது பேயாக இருக்கும் பிரதீப் ராவத்தும் அவரது குடும்பத்தினரும் தங்களோடு விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே உயிருடன் வெளியே போகமுடியும் என்று விளையாட்டினைப் பற்றிய விதிமுறைகளை கூறுகின்றனர்.
சந்தானமும் அவரது நண்பர்களும் அந்த விளையாட்டில் வெற்றி பெற்றார்களா, உயிர் பிழைத்தார்களா? என்பதே ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ஜாலியான கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் தொடங்கியது முதல் முடியும் வரை, நான் ஸ்டாப் காமெடியில் வயிறு வலிக்க, சிரிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பஞ்ச்! சந்தானத்தின் நடிப்பினில் இதற்கு முன்னர் வெளியான ஃபேன்டஸி படங்கள் பெரும்பாலும் ரசிக்க வைத்ததில்லை. ஆனால், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் முழுவதும் சிரிக்க வைக்கிறது. சந்தானம் தனது தனித்துவமான பஞ்ச்சில் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
தீபக் குமார் பதய் யின் ஒளிப்பதிவும், ஆஃப்ரோவின் இசையும், படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சந்தானம், சுரபி, மசூம் சங்கர், பிரதீப் ராவத், மாறன், கிங்ஸ்லி, ஃபெஃப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், பிபின், தீனா, சேது, தங்கதுரை, தீபா, மானஸ்வி, ரீட்டா என நடித்தவர்கள் ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’, காமெடிக்கு கேரண்டி . குடும்பத்துடன், ஜாலியாக பார்க்கலாம்.