இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி வந்த தனுஷின் 54வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் , இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி தற்போது தனுஷ் தயாரித்து நடிக்கும் அவரது 55 வது படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நாயகிகளாக சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்க, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர்,நடிகைகளின் விபரம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். சாய் அபியங்கர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. .இப்படத்துக்காக சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.