‘கோப்ரா’ படத்திற்கு முன் வெளியாகும், ‘சீயான்’ விக்ரமின் படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்து வந்தனர். மகனுக்கு வில்லனாக நடிக்கும், சீயான் விக்ரமின் 60 வது படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.வாணி போஜன் மற்றும் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வந்த ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் மீண்டும் இணைந்துள்ளார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கோப்ரா படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படம் ரிலிஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. கோப்ரா படம் முன்னரே துவங்கப்பட்டிருந்தாலும், அதில் இடம்பெறும் கிராபிக் காட்சிகளால் அது வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.