டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’!

இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியா போஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல்,  உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், தீபாவளி  அன்று வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் வெளியாகிறது.