கடந்த வாரம் வெளிவந்த படங்களில் கோலிவுட்டின் அதிகம் கவனம் ஈர்த்த படம் ‘ரூம்மேட்.’.
‘சிவசாய்’ நிறுவனம் சார்பில் இ.வினோத்குமார் தயாரித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் வசந்த் நாகராஜன் எழுதி, இயக்கியிருந்தார். நரேன், சௌமியா, விஷ்வா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருந்தனர்.
புதுமுக நடிகர்கள் நடித்து, சிறு முதலீட்டில் காதல், த்ரில்லர் கலந்து வித்தியாசமான திரைக்கதை மூலம் சொல்லப்பட்ட ‘ரூம்மேட்.’ திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த வரவேற்பினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் தற்போது அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
எந்த ஒரு விளம்பரம் இன்றி வெளியான ‘ரூம்மேட்’ கோலிவுட்டின் கவனம் ஈர்த்துள்ளது. ரசிகர்களின் மவுத் டாக் மூலம் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.
‘ரூம்மேட்’ பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.