10 லட்சம் மோசடி! கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுக விலிருந்து நீக்கம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியின் 62-வது  வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கவுன்சிலர் ஜெயச்சந்திரன்.  இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன் பிறகு திமுக வில் தீவிரமான கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்த வழக்கில், கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கைதான நிலையில், திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது மதுரை மாநகராட்சியின் 62 வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் என தெரிவித்துள்ளார்.