பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹார், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான், இந்துமதி, பி எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு, லியோன் ஜேம்ஸ் இசை, பிரதீப் ஈ .ராகவ் படத்தொகுப்பு.
தயாரிப்பு ‘ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட்’.
‘லவ் டுடே’ என்ற முதல் படத்தின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது படம், ‘டிராகன்’.
அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும், பிரபலமான பொறியியல் கல்லூரி. முதாலம் ஆண்டு சேர்ந்த மணவர்களுக்கான அறிமுக கூட்டம் நடை பெறுகிறது. அதில், கல்லூரியின் முதல்வர் மிஷ்கின், பிரதீப் ரங்கநாதனின் படத்தை திரையிட்டு அவரைப்பற்றி கூறுகிறார்.
பிளஸ் டூ வில், கோடு மெடல் வாங்கிய மாணவன் பிரதீப் ரங்க நாதன், கல்லூரியில் சேர்ந்து படிப்பதை விட, பொறுப்பற்ற முறையில் சுற்றித் திரிவதை கெத்தாக நினைத்து வருகிறார். கல்லூரி படிப்பின் காலம் முடிகிறது. சுமார் 48 அரியர்ஸ்களுடன் வெளியே வருகிறார். வேலை எதுவும் கிடைக்காமல், எதிர்கால சிந்தனையின்றி, பெற்றோரை ஏமாற்றி, நண்பர்களுடன் குடித்து விட்டு ஊர் சுற்றி வருகிறார். அவரது காதலி அனுபமா பரமேஸ்வரன், புத்திமதிகள் சொல்வதை கண்டு கொள்ளாமல் தன்னுடைய விருப்பப்படி சுற்றி வருகிறார். காதலி கைவிட்டுச் செல்கிறார். அதன் பிறகு, பிரதீப் ரங்கநாதன் குறுக்கு வழியில், போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேருகிறார். அதன்படி, வெகு சீக்கிரமாக பங்களா, கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது குறுக்கு வழி கல்லூரி முதல்வர் மிஷ்கினுக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்த்து? என்பது தான் டிராகன் படத்தின் மீதிக்கதை.
பிரதீப் ரங்கநாதனுக்கு , பொறுப்பில்லமல் குடித்துவிட்டு ஊர்சுற்றும் கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார். அவரது நடிப்பில், தனுஷ் சாயல் இன்னும் மாறவில்லை. ஆனால், காதல், காதலில் தோல்வி, சோகம் என காட்சிகளுக்கேற்றபடி நடித்து அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். மிஷ்கினுக்கும் அவருக்குமான காட்சிகள் ரசனையானவை. முழுப்படத்தையும் சுமந்து செல்லும் கதாபாத்திரம் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு கதாநயகிகள். அதில், பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி கால காதலியாக அனுபமா பரமேஸ்வரன். அவருடைய லுக்கும், ஸ்டைலும் சூப்பர். அதிலும் இடிப்பிலிருக்கும் டாட்டூவை பிரதீப் ரங்கநாதனுக்கு காட்டும் காட்சி சூப்பர். கல்லூரியில் ஜாலியான பெண்ணாகவும், கல்லூரி பேராசிரியையாகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
கயாடு லோஹர், தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்ச்சி காட்டுகிறார்.
கல்லூரி முதல்வராக மிஷ்கின். சிறப்பான நடிப்பின் மூலம், ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவருடைய காமெடிக்காட்சிகள் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக ஹர்ஷத் கான், குட்டி டிராகனாக நடித்து அமர்க்களப் படுத்துகிறார்.
இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் ஆகியோர் அலட்டலில்லாத தேர்ந்த நடிப்பினை கொடுத்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதனின் பெற்றோராக மரியம் ஜார்ஜ், இந்துமதி இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சினேகா, இவானா சில காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸ் இசையும் படத்திற்கு பெரும்பலம்.
அடுத்தவர்களை பாதிக்காத நேர்மையான வெற்றியே மனநிறைவு, மகிழ்ச்சி தரும். கருத்தினை, கல்லூரி மாணவ, மாணவிகளின் மூலமாக சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் கல்லூரி வாழ்க்கை என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காலகட்டமாகும். அதை எப்படி கடக்க வேண்டும். என்பதை கமர்ஷியல் ஐட்டங்களோடு, கலகலப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
மொத்தத்தில், ‘டிராகன்’ கல்லூரி மாணவர்களுக்கானது.