பிரதீப் ரங்கநாதன் – மமிதா பைஜூவின் ‘DUDE’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு தற்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்தியன் படமான ‘Dude’-ல் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இருந்து பிரதீப் ரங்கநாதனின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இன்று படக்குழு மமிதாவின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘பிரேமலு’ படத்தில் தனது எனர்ஜிடிக்கான கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா இந்த போஸ்டரில் பிரதீப்புக்கு சிறந்த ஜோடியாக இருக்கிறார். டிரெண்டிங் உடையில் பிரதீப்புடன் இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.