டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே டங்கி படத்திலிருந்து ஐந்து வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் உடைய அட்டகாசமான குரலில் ‘பந்தா’ பாடல் வெளியாகியுள்ளது.
படத்தில் வரும் ஷாருக்கானின் ஹார்டி கேரக்டரை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அறிமுகப்படுத்தும் ‘பந்தா’ பாடலானது, பெப்பி டிராக் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலை தில்ஜித் தோசன்ஜ் பாடியுள்ளார், பாடலின் வரிகளை குமார் எழுதியுள்ளார் மற்றும் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
ஷாருக்கானின் அறிமுகப் பாடல் நிச்சயம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னொருபுறம், ஷாருக் துபாயில் உள்ள ‘தி வோக்ஸ் சினிமா’ மற்றும் குளோபல் வில்லேஜை பார்வையிட்டதோடு, அங்கு அவர் படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்கனவே உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் டங்கி டைரிஸ் என்ற பெயரில் ஒரு சிறப்பு விருந்தை அறிவித்துள்ளனர்.
டங்கி திரைப்படத்தின் அனுபவங்களை அந்த உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான், மற்றும் டாப்ஸி பண்ணு பங்குபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி டங்கி டயரிஸ் எனும் பெயரில் வெளியாகியுள்ளது.
#DunkiDiaries முழு வீடியோ இதோ
படம் ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனைகளை படைக்க ஆரம்பித்து விட்டது. இதுவரையிலான பல பெரிய படங்களை முறியடித்துள்ளதில், பார்வையாளர்களின் உற்சாகம் நன்றாகவே தெரிகிறது.
டிசம்பர் 22 ஆம் தேதி, ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில் மனதைக் கவரும், அன்பான உலகத்தைப் பார்க்க பார்வையாளர்கள் தயாராகி வரும் நிலையில், டங்கி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள “டங்கி டிராப் 6 பந்தா” பாடல் மற்றும் டங்கி டயரீஸ் வீடியோக்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.