டங்கி டிராப் 4 – டிரெய்லர் இறுதியாக ராஜ்குமார் ஹிரானி உருவாக்கியிருக்கும் அன்பு மிகுந்த உலகத்தினை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்தது. மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைக் கவர்ந்த இந்த டிரெய்லர், 24 மணிநேரத்தில் ஹிந்தி சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்தது.
இந்த மயக்கும் கதையின் அடுத்த அத்தியாயத்தைப் படம்பிடித்து காட்டும்விதமாக, ஷாருக்கானும் டாப்ஸியும் இணைந்து தோன்றும் அழகான காதல் பாடலாக டங்கி டிராப் 5 ஓ மஹி வெளியாகியுள்ளது. ஹார்டி மற்றும் மனு கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள தன்னலமற்ற அன்பின் ஆழமான சக்தியை இந்த மெல்லிசைப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவர்கள் இதயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் நிலையில், மிகக்கடினமான வாழ்க்கையை மாற்றும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் காதல் கதையின் அழகு, பாடலின் உள்ளத்தைத் தூண்டும் மெலடியில் அற்புதமாக வெளிப்பட்டு, கேட்பவர்களின் மனதில் ஆழமாக எதிரொலிக்கிறது.
அரிஜித் சிங்கின் மெய்சிலிர்க்க வைக்கும் குரல், இசை மேஸ்ட்ரோ ப்ரீதமின் அழகான இசை, கவித்துவமான இர்ஷாத் கமில் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகள் மற்றும் பிரபல நடனக் கலைஞர் வைபவி மெர்ச்சண்டின் நடன வடிவமைப்பு என, டங்கி டிராப் 5 நம்மை மயக்குகிறது – ஓ மஹி உண்மையில் காட்சி மற்றும் இசை விருந்தாகும்!
அழகான பாலைவனப் பகுதிகளின் பின்னணியில் இந்தப் பாடல் காட்சியாக விரிகிறது, ஹார்டிக்கும் மனுவுக்கும் இடையிலான காதலைக் குறிக்கும் அதே வேளையில் அவர்களின் பயணத்தின் உள்ளார்ந்த போராட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காட்சியமைப்புகள் பாடல் வரிகள் மற்றும் மயக்கும் மெல்லிசை ஆகியவை இணைந்து மனம் மயக்கும் ஒரு சினிமா அனுபவத்தை உருவாக்குகிறது, நம்முள் அது உணர்வுபூர்வமாக எதிரொலிக்கிறது.
ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியான டங்கி டிராப் 1 இல் தொடங்கிய விருந்து, டங்கி டிராப் 2 இல் அரிஜித் சிங்கின் மெல்லிசைக் குரலில் வெளியான லுட் புட் கயா மயக்கும் இசைப் பயணமாக இருந்தது. சோனு நிகாமின் ஆன்மாவைத் தூண்டும் நிக்லே தி கபி ஹம் கர் சே பாடலுடன் வெளியான டங்கி டிராப் 3, வீட்டை விட்டு வெளியில் நெடுந்தூரத்தில் இருக்கும் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் இதயத் துடிப்பை அதிகரித்தது. இப்போது, டங்கி டிராப் 5 இந்த அன்பான கதைக்கு மற்றொரு கீரிடத்தைச் சேர்க்கிறது, இது பார்வையாளர்களைக் கவரும் இதயப்பூர்வமான மெலடியாக அமைந்துள்ளது.
டங்கி டிராப் 5 ஆக, ஓ மஹி அன்பின் சக்தியை சொல்வதுடன் அற்புதமான நடிப்பில் நம் மனம் வருடும் இசை மற்றும் வசீகரிக்கும் காட்சிகள் என அனைத்தும் இணைந்து வெளிப்படும் மாயாஜால பயணத்தில் இட்டுச்செல்கிறது.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.
Love, ishq, mohabbat, pyaar…yeh sabka izhaar karne mein hum waqt laga dete hain. Sometimes we don’t get the chance. Sometimes we don’t find the words. This song is dedicated to all the lovers who feel like this…So say it Now…Today…Tomorrow, and Everyday…” Mere Ishq pe Haq… pic.twitter.com/8LQz12kTNv
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2023