எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில், எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம், இ மெயில். இதில், ‘முருகா’ அசோக், ராகினி திவேதி, ஆர்த்தி ஸ்ரீ, பில்லி முரளி, மனோபாலா, ஆதவ் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அவினாஷ் கவாஸ்கர்,பின்னணி இசை ஜுபின், ஒளிப்பதிவு செய்திருக்கிறார், செல்வம்.
மனோபால நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், ராகினி திவேதி. தோழிகளுடன் அறையில் தங்கி வருபவருக்கு பொருளாதார நெருக்கடி. வேறு வேலை தேடி அலைபவருக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை. கிடைக்கும் நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவருகிறார். திடிரென ஒருநாள் ஆன்லைன் விளையாட்டின் மூலம் பணம் கொட்டுகிறது. இதனால், தோழிகளுக்கு தெரியாமல் தினமும் விளையாடி வருகிறார். சில தோல்விகளுக்கு பிறகு அவருக்கு ஒரு இ மெயில் வருகிறது. அதில், ஒரு ஹார்ட் டிஸ்கைத் திருடித் தருமாறு, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. அதிர்ந்து போகும் அவர் அதன் பிறகு என்ன செய்தார்? என்பது தான், இ மெயில் படத்தின் கிரைம் டிராமா த்ரில்லர் திரைக்கதை!
ஆன்லைன் விளையாட்டு வில்லங்கத்தினை விளக்க முயன்ற இயக்குனர் எஸ்.ஆர்.ராஜன், அரசியல், மாஃபியா கும்பலை முன்னிறுத்தி கதையை நகர்த்துகிறார். க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திருப்பங்கள் படத்தின் பலம்.
இ மெயில் படத்தில், கதாநாயகன் அசோக்கை விட, கதாநாயகி ராகினி திவேதிக்குத்தான் அதிக காட்சியமைப்பு. ஆடல், பாடல், சண்டை என அனைதுக் காட்சிகளிலும், நீக்கமற நிறைந்திருக்கிறார்.
புதுமையான காட்சிகள், எதுவும் இல்லாமல் பழைய சினிமா டெம்ப்ளேட்டில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதை. இயக்குனர் நல்ல வாய்ப்பினை தவற விட்டுள்ளார். மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட நடிகர்களிடமிருந்து சரியான முறையில் நடிப்பினை வாங்கத் தவறியிருக்கிறார்கள்.
, ‘முருகா’ அசோக், ராகினி திவேதி, ஆர்த்தி ஸ்ரீ, பில்லி முரளி, மனோபாலா, ஆதவ் பாலாஜி தங்களால் முடிந்தவரை நடிப்பினை கொடுத்துள்ளனர்.
இ மெயில் – எச்சரிக்கை.