‘இன்சைட் அவுட் 2’ மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து ‘எலியோ’ திரைப்படத்தை வழங்க உள்ளன. இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும், ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது! வெளியாகிறது. இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற பேன்டசி படங்களின் வரிசையில், எலியோ திரைப்படத்தினை டிஸ்னி மற்றும் பிக்சார் வழங்குகிறது.
எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும்போது வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான்.
எலியோ. இந்த பயணத்தில், தனக்கென இருக்கும் இடத்தை உணர்வதும், உண்மையிலேயே யார் என்பதை கண்டுபிடிப்பதும் தான் கதையின் மையம்.
மடலின் ஷரஃபியன் (Burrow), டோமீ ஷீ (Turning Red, Bao), ஏட்ரியன் மோலினா (Coco) ஆகியோர் எலியோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
எலியோ திரைப்படம், ஜூன் 20 தேதி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.