சதாசிவம் சின்னராஜ் ( சிவா), சாய் தான்யா ( ரோஸி ),பேரரசு, பிளாக் பாண்டி ( பாலா), சன் டிவி ஆதவன், OAK சுந்தர் , லொள்ளுசபா, மனோகர், TKS,செந்தி குமாரி ( லக்ஷ்மி) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கதாநாயகனாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்க்கியிருக்கிறார், சதாசிவம் சின்னராஜ்.
எளிய, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை அத்தியாவசியங்களை பூர்த்தி செய்யும் கடன் முறை, மாத்தவணை. அது, மிதமிஞ்சினால் என்னவாகும் என்பதை எடுத்துட்டொல்லும் படம் தான், ‘EMI (மாதத் தவணை)’.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யா மீது காதல் கொள்கிறார். இவர்களது காதல், இருதரப்பினரின் குடும்பத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டு, திருமணமும் நடைபெறுகிறது. திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. காதல் மனைவியை குஷி படுத்துவதற்காக, செல்போன், பைக், கார் ஆகியற்றை மாதத் தவணை முறையில் கடனுக்கு வாங்குகிறார். வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கும் போது, நாயகன் சதாசிவம் சின்னராஜூக்கு வேலை போகிறது. அதனால், ஏற்படும் பொருளாதார சிக்கலில், கட்ட வேண்டிய மாதத் தவணைகளை கட்ட முடியாமல் திணறுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, கொஞ்சம் ஜாலியான திரைக்கதை மூலம் சொல்வதே ‘EMI’ (மாத தவணை).
சதாசிவம் சின்னராஜ், நாயகனாக நடித்திருப்பதோடு ‘EMI’ (மாத தவணை) படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார். அவருக்கு இது முதல் படமாக இருந்தாலும், அனுபவப்பட்டவரைப் போல் நடித்து, இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. பட்ஜெட்டின் பற்றாக்குறை இருந்த போதும், அவ்வளவு மோசமில்லை, என்று சொல்லும் அளவிற்கு படம் இருக்கிறது.
சாய் தன்யா, நாயகி. மாதத் தவணை மூலம் எப்படி ஒவ்வொரு குடும்பத்தலைவரும் மாட்டிக்கொள்கிறார்கள், அவர்களின் இக்கட்டான சூழலுக்கு காரணமான குடும்பத்தலைவியாக விளங்குபவராக அவரின் நடிப்பும், கதாபாத்திரமும் கச்சிதம். காதலியாகவும், மனைவியாகவும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். இக்கட்டான கடன் சூழலில், கண்வரைப்பிரியாத மனைவியாக, கச்சிதமான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
இவர்களோடு நடித்திருக்கும் நாயகியின் தந்தை இயக்குநர் பேரரசு, நாயகனின் அம்மா செந்தி குமாரி, நாயகனின் நண்பர் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் , ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
இசையமைத்திருக்கிறார், இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை. பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை காட்சிகளுக்கேற்றபடியும் இருக்கிறது.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ். குறைசொல்லும்படி இல்லை.
மாதத் தவணை குறித்த, அதனால் ஏற்படும் சிக்கல்களை காட்சிப்படுத்திய, அறிமுக இயக்குநர் சதாசிவம் சின்னராஜ், வெறும் அறிவுரை சொல்லும்படியாக இல்லாமல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து ஜனரஞசகமான முறையில், விழிப்புணர்வாக சொல்லியிருப்பதும், அதோடு, சாலை விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவனைகளில் இலவச சிகிச்சை. தலைக்கவசம் அணிவது குறித்த அவசியம் ஆகியவையும் சொல்லப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ‘EMI’ (மாத தவணை), ஓகேவான படம்!