பெண்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை யாதவா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் 11.10.2018-ம் தேதியன்று குத்துவிளக்கேற்றி, விழிப்புணர்வு நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு.அசோகன், அவர்கள், குற்றப்பரிவு காவல் உதவி ஆணையர் திரு.ரமேஷ் அவர்கள் ஆகியோர் உட்பட 4000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், வன்முறை, தீங்கிழைத்தல் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து, ஆரோக்கியமாக வாழ உடல் திறமை மன வளர்ச்சி பெற்று தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என்றும் மேலும் நவீன உலகில் இணையதளங்கள் மூலமாக எளிய முறையில் ஏமாற்றப்படும் நபர்களிடமிருந்து மாணவிகள் அனைவரும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கம் அளித்தார்.

மேலும் சென்னை மாநகரைச் சேர்ந்த திரு.ஸ்ரீராம் அவர்கள் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து மாணவிகளுக்கும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினார். மேலும் குழந்தை கடத்தல் தடுப்புப்பரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமாமாலா அவர்கள் போக்சோ சட்டத்தை பற்றிய எடுத்துரைத்தார். மேலும் குற்ற தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சர்மிளா அவர்கள் பெண்கள் ஆபத்தான சுழ்நிலையில் காவல்துறையினரை எளிதில் தொடர்பு கொள்வதற்கான SOS மொபைல் ஆப் பதிவிறக்கம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விளக்கத்தினை கொடுத்தார்.