‘பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட’  த்ரில்லிங்க் படம் ‘ரூம்’

Room Tamil Movie – Film shot inside the bathroom

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரடக்சன்ஸ்’ மற்றும் அஸ்வின் கே.வின் ‘மார்ச் 30′ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’.

பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகி வருகிறார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’  தயாராகிறது.

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா  படத்தின் கதாநாயகனாகவும் ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.

‘ரூம்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்கிறது. இது தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சி எனவும், இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும் என  படத்தின் இயக்குனர் பத்மாமகன் கூறுகிறார்.

எம்.எஸ்.பிரபு  ஒளிப்பதிவு செய்ய, தெலுங்கில் பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்த வினோத் யஜமான்யா இசையமைக்கிறார்.