‘கேங்கர்ஸ்’ ( விமர்சனம்.) காமெடி களேபரம்!

சுந்தர் .சி, வடிவேலு, காத்ரின் தெரசா, வாணிபோஜன்,  முனிஷ்காந்த் , பக்ஸ்,  காளை , ஹரிஷ் பேரடி , மைம் கோபி , அருள்தாஸ் , சந்தானபாரதி, விச்சு , மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், கேங்கர்ஸ். இத்திரைப்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார், வெங்கட்ராகவன். யக்கியிருக்கிறார், சுந்தர் சி. ‘பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ சார்பில், ஏ.சி.எஸ் அருண்குமார், ‘அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில், குஷ்பு சுந்தர் ஆகியோர், இணைந்து தயாரித்திருக்கின்றனர். இசை – சி . சத்யா.  ஒளிப்பதிவு  – ஈ.கிருஷ்ணமூர்த்தி.

ஒரு டெரர் கும்பல், பல கோடிக்கணக்கான பணத்தை, ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறது. அந்தப்பணத்தினை, வடிவேலு தலைமையிலான காமெடி கும்பல், கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், கேங்கர்ஸ்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு, வடிவேலு – சுந்தர் சி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்கு, எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை, சுந்தர். சி,  தனக்கே உரித்தான் ஸ்டைலில், கலகலப்பினையும், கிளுகிளுப்பினையும் சரியான விதத்தில் கலந்து, அவரது ரசிகர்களுக்கும், வடிவேலுவின் ரசிகர்களுக்கும் விருந்து படைத்திருக்கிறார்.

‘கேங்கர்ஸ்’ லாஜிக்கை கண்டுகொள்ளாமல், பொழுது போக்கு அம்சத்தினை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பகுதி சற்று போராடித்தாலும், அதன் பிறகான காட்சிகளும், இரண்டாம் பகுதியும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடம் திட்டமும், செயல் பாடும் விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கின்றன. வடிவேலுவின் பலவிதமான கெட்டப்புக்கள், அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைத்துள்ளது.

சுந்தர் சி, வடிவேலு காம்போ லாஜிக்குகளை மறக்கச்செய்து, ரசிகர்களை இரண்டரை மணி நேரம்  சிரிக்க வைக்கிறது. ஒரு சில காட்சிகளைத்தவிர, அநேகமான காட்சிகள் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. இதனோடு, ‘மத கஜ ராஜா’ படத்தின் ஐடியா, கமெடியும் இணைந்து, காமெடி களேபரமாக மாறியது, திரைக்கதையின் சிறப்பு!

சுந்தர் சி தனது வழக்கமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை திருப்தி படுத்துகிறார். காத்ரின் தெரசா, வாணிபோஜன் இருவரில், அதிகம் ரசிகர்களை ஈர்ப்பவர் காத்ரின் தெரசா. இவர்களோடு சேர்ந்து ,  முனிஷ்காந்த் , பக்ஸ்,  காளை , ஹரிஷ் பேரடி , மைம் கோபி , அருள்தாஸ் , சந்தானபாரதி, விச்சு , மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ் ஆகியோரும் சிரிப்பினை வரவழைத்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சத்யாவின் இசையில், பாடல்களை விட பின்னணி இசை, ஓகேவாக இருக்கிறது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி, படம் முழுவதையும் கலர்பஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு, தொடர் காமெடிக் காட்சிகளை ரசிப்பது போல் இருக்கிறது.

வெங்கட் ராகவனின் திரைக்கதை, வசனம்  சிறப்பானக் காமெடி காட்சிகளுக்கு வழிவகுத்துள்ளது. அதோடு யூகிக்க முடியாத திருப்பங்களால் சுவாரசியமாகவும் இருப்பது படத்தின் பலம்.

இயக்குநர் சுந்தர் சி, தன்னுடைய இயக்கத்தின் மூலமாக, படத்தை மேலும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

மொத்தத்தில், கேங்கர்ஸ், காமெடிப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும்!

‘கேங்கர்ஸ்’ – காமெடி களேபரம்!