விஜய், பிரஷாந்த், பிரபு தேவா ஆகியோர், இந்திய ராணுவ உளவுப்படையின் கீழ் பணியாற்றும் நெருக்கமான நண்பர்கள் இவர்களின் தலைவர் ஜெயராம். இந்திய ராணுவ உளவுப்படைத் தலைவர் மோகன். இவர் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கென்யாவில் நடக்கும் ஒரு சதி தடுப்பு நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக அவர் கொல்லப்படுகிறார்.
விஜய், தாய்லாந்திற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார். அப்போது மர்ம நபர்கள் விஜய்யின் மகனை கடத்துகிறார்கள். தாய்லாந்து போலீசார் கடத்தல் காரர்களை விரட்டிச்செல்லும்போது அந்தக்கார் விபத்துக்குள்ளாகி விஜய்யின் மகன் இறந்து விடுகிறார். விஜய்யும் அவரது மனைவியும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு, ரஷ்யா செல்லும் விஜய் அவரைப்போல் உருவம் கொண்ட ஒரு இளைஞரை சந்திக்கிறார். அப்போது மர்ம நபர்கள் அவர்களை நோக்கி சுடுகின்றனர். இருவரும் தப்பித்து செல்ல முயற்சிக்க அவர்களை மர்ம கும்பல் துரத்துகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் கதை. இதை வெங்கட் பிரபு தனது வழக்கமான குடி, கும்மாளம், கூத்து இவைகளை சற்றே குறைத்து கொண்டு படமாக்கியிருக்கிறார்.
விஜய்காந்த், அர்ஜூன் இவர்கள் நடித்து வெளிவந்த படங்களின் மறுவடிவம் தான் இந்த GOAT (The Greatest of All Time) கோட் படம். உளவுத்துறை, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை, மிக மட்டமான ரசனையில் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் வெங்கெட் பிரபு. திரைக்கதை சுவாரசியமாக இல்லை! இந்த மட்டமான திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பது காந்தி மற்றும் ஜீவன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய். விஜய் மட்டுமே படத்தின் மிகப்பெரும் பலம். குறும்பு, கிண்டல் என படம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். த்ரிஷாவோடு ஆட்டம் போடும் குத்து டான்ஸ், ரசிகர்களுக்கு விருந்து.
விஜய்யுடன், அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் திரைக்கதை நகர்வுக்கு உதவியிருக்கிறார்கள்.
விஜய்யின் மனைவியாக நடித்திருக்கும் சினேகா, விஜய்யின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, லைலா, இவர்களோடு வீணடிக்கப்பட்டிருக்கும் வில்லன் மோகன், பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ் அரவிந்த், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்!
யுவன் சங்கர் ராஜா, இசையமைத்திருக்கிறார்! ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா. சவுண்ட் எஃபெக்ட்ஸ் – வி எஃபெக்ட்ஸ் இரண்டும் நன்றாக இருக்கிறது. மற்றபடி எதுவும் இல்லை.
மொத்தத்தில், GOAT (The Greatest of All Time) கோட் – வெங்கெட் பிரபுவின் மசாலா!