கோகோ மாகோ – விமர்சனம்

காதலர்களின் ரோட் ட்ரிப்பை ரகசியமாக படம்பிடித்து தன்னுடைய இசை ஆல்பத்தை தயார் செய்கிறார் இசையமைப்பாளரான அருண்காந்த். கதலர்களை ஃபாலோ பண்ணாலே சுவாரஷ்யம தான். அதிலும் அவர்களுடைய நெருக்கத்தை , அவர்களுக்குள்ளே நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்தால் அதைவிட சுவாரஷ்யம் தானே.

அருண்காந்த் என்ற அறிமுக இயக்குநர் புதுமுகங்களை வைத்து இயக்கி, இசையமைத்து பல்வேறு பணிகளையும் செய்து தயாரித்திருக்கும் இந்த ‘கோகோ மாகோ’ எப்படி என்பதை பார்ப்போம்.

தன்னுடைய இசை ஆல்பத்தை வெளியிடுவதற்காக சில,பல வருடங்களாக, இசை நிறுவனங்களை அனுகிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளரான அருண்காந்த், (நிஜத்திலேயே நிறைய அனுபவித்திருப்பார் போல, அங்கங்கே டைலாக்கிலேயும் காட்சிகளையும் பின்னி எடுத்திருக்கிறார் பல இசை நிறுவனங்களை. அதிலேயும் ‘காதுக்கு எப்போ கண்ண வச்சாங்க’ன்ற டைலாக்க் சூப்பர் )

அதற்காக ரோட் ட்ரிப் செல்லும் காதலர்களான ராம்குமார் – தனுஷா ஜோடியின் காதல், மோதல் குறும்புகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை வீடியோ ஆல்பமாக தயாரிக்க முடிவு செய்கிறார். இதற்கு ஒளிப்பதிவாளர் சாம்ஸ் அன்ட் கோ நியமிக்கப்பட்டு காதல் ஜோடியுடன் பின் தொடர்கிறார். இந்த படப்பிடிப்பு சக்ஸஸ் ஆனதா இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்.

சாதிக்க நினைக்கத் துடிக்கும் இளைஞரான படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த், ஹீரோ ராம்குமார், ஹீரோயின் தனுஷா உள்ளிட்ட படத்தில் நடித்திருப்பவர்களும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் எனெர்ஜியாக வேலை செய்திருக்கிறார்கள்.

ராம்குமார், தனுஷா அவர்களை பின் தொடரும் சாம்ஸ் மற்றும் அவரது சிஷ்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. சில இடங்களில் போதும் விட்டுருங்கன்னு கதறவும் வைக்கிறது.

அதேபோல், வினோத் வர்மா மற்றும் சாரா ஆகியோரின் நடிப்பும், டெல்லி கணேஷ் மற்றும் அஜய் ரத்தினத்தின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ( அஜய் ரத்னத்தை ஆஃபிஸ் பாய் கலாய்க்கும் காட்சி செம்ம ). இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு தங்களால் முடிந்த ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சீரியாசாக பண்ணியிருந்தால் ஒரு நல்ல காமெடி காதல் கதையை கொடுத்திருக்க முடியும்.

மொத்தத்தில், இந்த ‘கோகோ மாகோ’ வித்தியாசமான முயற்சி!