வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இரண்டாவது படம் “பழனிச்சாமி வாத்தியார்”.
தமிழ் திரையுலகில் என்றைக்குமே ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களை போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மேலும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால், R.K. சுரேஷ்,மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது.. விரைவில் இதன் படபிடிப்பு ஆரம்பமாகிறது..
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக முன்னணி ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது!