விஜய்யின் ‘பீஸ்ட்’ ஃபீவர் மோடில், ‘டாக்டர்’. பட்டையை கிளப்பும் ரிசர்வேஷன்!

கொரோனா லாக்டவுனுக்கு பிறகான படங்களின் வெளியீட்டில் அதிக கவனம் பெற்றுள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். வினய் ராய் வில்லனாக நடித்திருக்க, இவர்களுடன் யோகிபாபு, ரெடின் ஆகியோர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள ‘டாக்டர்’  திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின்  Sivakarthikeyan Productions உடன் இணைந்து,  KJR Studios சார்பில் கோட்டபாடி  J ராஜேஷ் தயாரித்துள்ளார்.

நாளை அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆரவாரமாக நடந்து வருகிறது. இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு காரணமாக இருந்தாலும், ‘டாக்டர்’ படத்தினை இயக்கியிருக்கும் நெல்சன் திலிப்குமார் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருவதால், விஜய் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்குமுன் இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ கொடுத்த வெற்றியும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், வியாபார வட்டத்தினை சேர்ந்தவர்கள் ‘டாக்டர்’ படம் பெரிய ஓப்பனிங்குடன், வெளியான ஒரு சில நாட்களிலேயே மிகப்பெரிய வசூல் செய்யும் படமாக இருக்கும் என்கின்றனர்.