நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர் ராம்குமாரின் இரண்டாவது மகனுமான தர்சன் கணேசன் தமிழ்த்திரையுலகில் கதாநாயனாக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே இவரது மூத்த சகோதரர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்ட தர்சன் கணேசன் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Next Post