‘கார்டியன்’ – விமர்சனம்!

ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில், இயக்குநர் விஜய் சந்தர் தயாரித்துள்ள படம் கார்டியன். சபரி – குரு சரவணன் இயக்கியுள்ளனர். இதில் ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், தியா, தங்கதுரை  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறுவயது முதலே ஹன்சிகா மோத்வானி எதிலுமே ராசியில்லாதவராக இருக்கிறார். இவர் ஆசைப்படும் எதுவுமே கைகூடாது. வாழ்க்கை முழுவதும் அவரை துரதிஷ்டம் துரத்திக்கொண்டே வருகிறது. திடீரென ஒரு நாள், இவர் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து விடுகிறது. இதனால் இவருக்கு ஆச்சர்யமும், பயமும் ஏற்படுகிறது. இதனால் ஒரு டாக்டரின் உதவியை நாடுகிறார். அவர் மனோ தத்துவ முறையில் சிகிச்சை அளிக்கிறார். அதன் பிறகு, ஒரு நாள் தான் வேலை செய்யும் முதலாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க நினைக்கிறார் அது முடியாமல் போகிறது. அதோடு ஒரு அமானுஷ்யமான சக்தி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்து கொள்கிறது. இதன் பின்னர் என்ன நடக்கிறது? என்பது தான்< கார்டியன் படத்தின் கதை.

வழக்கமான பேய் டெம்ளேட்டுகளின் கதை தான், கார்டியன். இதில் எதுவுமே புதிதில்லை. அதாவது, அப்பாவி பெண்ணொருவர், நான்கு பேர் கொண்ட கும்பலால், கொடுமையான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பெண் பேயாக மாறி, அனைவரையும் கொலை செய்ய கிளம்பி விடுகிறார்.

கதை, திரைக்கதையில் எந்தவிதமான புதுமையோ, சுவாரசியமான காட்சிகளோ இல்லை. இதனால், ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.

ஹன்சிக ஒரு சில இடங்களில் மட்டுமே கவனிக்கும் படி நடித்திருக்கிறார். அதே நேரத்தில் புதுமுகம் தியாவின் நடிப்பு கவனிக்கும் படி இருக்கிறது.

ஒளிப்பதிவும் இசையும் சற்றே ஆறுதல தருகிறது. மற்ற படி கார்டியன் படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை!

மொத்தத்தில்,  ‘கார்டியன்’  திகிலே இல்லாத திகில் படம்!?