பிரசாந்த் வர்மா இயக்கத்தில், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹனு-மேன்’. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.
‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ்ஜா பேசுகையில்,
” அனுமனின் சிறிய மந்திரத்தை பாடிவிட்டு, பேச தொடங்குகிறேன். ”மனோஜவம் மருததுல்யவேகம்.. ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம்… வதத்மஜம் வானராயுத முக்யம்… ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி..’. அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா..?.இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், ” மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்கவர். அவர் வாயு பகவானின் மகன். குரங்குகளின் தலைவன். ஸ்ரீ ராமரின் தூதருக்குத் தலை வணங்குகிறேன்” எனப் பொருள்.
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஸ்பைடர் மேனும், பேட்மேனும்தான் சூப்பர் ஹீரோக்கள். அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கற்பனையால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் அனுமன் நமது அசலான நாயகன். நமது கலாச்சாரம், நமது வரலாறு, ஹனுமன் எங்களது சூப்பர் ஹீரோ.
இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநரின் நம்பிக்கைக்கு என்னால் நன்றி என்ற ஒற்றை சொல் மட்டும் சொல்வது போதாது. இது நாங்கள் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. பிரசாந்த்- ஒரு நுட்பமான படைப்பாற்றல் கொண்ட கலைஞர். நேர்மையுடனும், பணிவுடனும் இந்த படைப்பினை உருவாக்கி இருக்கிறோம். அனுமன் பணிவானவர். நேர்மையானவர். ஆனால் அவர் வலிமையானவர். எங்களது படமும் அப்படித்தான். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களின் கண்களுக்கு அழகான காட்சி விருந்தாக அமையும் .
அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் ஸ்ரீனு, வினய் ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் என்று நம்புகிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் ” என்றார்.