ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’ ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் ஜூன் 2, ஆம் தேதி வெளியாகிறது.

வீரன் படத்தின் முதல் சிங்கிள் ‘தண்டர்காரன்’ ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என வலுவான ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தில் அவரது இருப்பும், ஏ.ஆர்.கே.சரவனின் புதுமையான கதைசொல்லலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.

வீரன் படத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது.