‘இந்தியன் 2’ திரைப்படத்தின் 12 நிமிட, காட்சிகள் குறைப்பு!

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, ஜெகன் ஆகியோரது நடிப்பினில் கடந்த வாரம் வெளியான படம் இந்தியன்2. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து இருவேறு மாறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் வசூலை பொறுத்தவரை, இந்தியன்2 குறிப்பிடத்தக்க வச்சுலை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியன்2 படத்தின் நீளம் கருதி, சுமார் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியன் 2 படத்தின்  புதிய பதிப்பு அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது.