தென்னிந்தியாவில், தொடர்ந்து பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வரும், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் , சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர்.
‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பல மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு, உலகமெங்குமுள்ள சினிமா ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இதற்காக, ‘இந்தியன் 2’ படக்குழுவினர் உலக அளவில் புரொமோஷன் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, துபாயில் வான்வெளி சாகசங்களை நிகழ்த்தி வரும் ‘Dubai Skies’ நிறுவனத்தின், பாராசூட் வீரர்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் பேனரை வானில், மிக உயரத்தில் பறக்கவிட்டனர்.இது குறித்த வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி, உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.
ஏற்கனவே, இந்தியா முழுவதும் படத்திற்கான விளம்பர பணிகளை, தீவிரமாக மேற்கொண்டுள்ள லைகா நிறுவனம், இந்தியத் திரையுலகில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு பணிகளையும் பிரம்மாண்டமாக செய்து வருகிறது. இந்த விளம்பர பணிகளால், இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது.
இதன் காரணமாக, இந்தியன் 2 படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையில், நிச்சயமாக சாதனைகள் படைக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் மத்தியில் கூறப்படுகிறது.