அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் ‘காயம்குளம் கொச்சூன்னி’.

கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘காயம்குளம் கொச்சூன்னி’. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது. ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ என்ற சிறப்பை பெறுகிறது.

இது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்” என்றார்.

நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் இதிக்காரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.