‘இன்ஷா அல்லாஹ்’ :  விமர்சனம்

‘நேசம் என்டர்டெய்ன்மென்ட்’ பிரைவேட் லிமிடெட், தயாரித்து,  சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். மோகன், மேனகா, நம்பிராஜன், திருமதி பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இஸ்லாமிய மக்களின் வாழ்வியலையும், அவர்களின் மனிதநேய செயல்பாடுகளையும், வணிக நோக்கமற்ற பாணியில் திரைப்படமாக உருவாக்க முயற்சி செய்திருக்கிறார், இயக்குனர். அதோடு, இஸ்லாம் மதத்தினர் மார்க்க நெறியின் படி வாழ்பவர்களுக்கு சொர்க்கமும், அதனை புறக்கணிப்பவர்களுக்கு நரகமும் கிடைக்கும். என்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திரு நங்கையை பார்த்து ஏன் கதாநாயகன் மிரண்டு ஓடுகிறார்? ஒரு பெண் வீட்டில் ‘தொழுகை’ நடத்தும் போது அந்த வீட்டின் சுவற்றில் ‘விநாயகர்’ படம் இருப்பது எதன் குறியீடு? போன்ற காட்சிகள் என்ன உணர்த்துகிறது என்பது தெரியவில்லை. இதைப் போல், படத்தில் இடம் பெறும் அநேக காட்சிகள் புரியாத புதிராகவே இருக்கிறது.

மத வித்தியாசமின்றி சடலங்களை நல்லடக்கம் செய்யும் ‘ஜீவ சாந்தி’ தொண்டு நிறுவனத்தில் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

‘ரஷ்’ வடிவில் சில காட்சிகளும், ‘டபுல் பாசிடிவ்’ வடிவில் சில காட்சிகளையும் ‘எடிட்’ செய்யாமல் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தினை பற்றி இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!

இன்ஷா அல்லாஹ்…