விபத்துக்குள்ளானவரை உரிய நேரத்தில் காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் மேம்பாலத்தில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் செல்வது வழக்கம் கடந்த 04.10.2018-ம் தேதியன்று ராம்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

அச்சமயம் அவ்வழியாக வந்த தேனி மாவட்ட குற்றப்பரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் திருமதி.சந்தானலட்சுமி அவர்கள் விபத்து ஏற்பட்ட நபரை கண்டதும் உடனே தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து ராம்குமாரின் பெற்றோருக்கு தகவல் அளித்து அவர்களை வரவழைத்தார்.

உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து தகுந்த சிகிச்சை அளிக்க உதவிய காவல் ஆய்வாளர் திருமதி.சந்தானலட்சுமி அவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.