ஷாருக்கானின் நடிப்பில் பரபரப்பை கிளப்பியிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK எனும் ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் தொடர்பு கொள்வதால், அவருடன் ரசிகர்கள் உரையாடுவது, உண்மையில் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஷாருக்கானின் ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. ஷாருக்கானிடம் படத்தின் கதையைக் கேட்பது முதல், அவரது கதாபாத்திரம் குறித்து கேட்பதுவரை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#AskSRK டிவிட்டர் அமர்வில் SRK தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன், ரசிகர்கள் தங்கள் கேள்வியுடன் வந்து, கிங்கானிடமிருந்து பல சுவாரஸ்யமான கேள்வி பதில்களால் இணையத்தை குதூகலமாக்கி வருகின்றனர்.
“ஜவான்” திரைப்படத்திலிருந்து வெளிவந்த சுவாரஸ்யம் :
இந்த அமர்வில், ரசிகரின் கேள்விக்கு மிக சுவாரஸ்யமிக்க புத்திசாலித்தனமான பதில் தந்தார் SRK.
“இந்தப் படம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்… அவர்களை எப்படி மதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்பதில் வலுவான கருத்தைக் கொண்டுள்ளது.” என்றார்.
The film has a strong take on women empowerment…how to respect and stand for them. #Jawan https://t.co/Bd2HySxhZF
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
ஜவான் என்னவிதமான ஜானர் படம் என்பது குறித்து SRK தந்த பதில் :
SRK தந்த பதில், “ஜவான் ஒரு எமோஷனல் டிராமா….#ஜவான்”
Emotional drama….#Jawan https://t.co/sWU3WDgi0F
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் குறித்து பகிர்ந்ததாவது…
இந்த அமர்வில் SRK, “@VijaySethuOffl ஒரு அற்புதமான மனிதர் மற்றும் நடிகர். உண்மையில் நடிப்பில் அவரது நுட்பமான நுணுக்கங்கள் மற்றும் அற்புதங்களை அனைவரும் படத்தில் பார்க்க வேண்டும். மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். #ஜவான்” என்று பகிர்ந்துள்ளார்.
@VijaySethuOffl he is such an amazing person and actor. Really want everyone to see his subtle nuances and histrionics in the film. Too good. #Jawan https://t.co/Qbx5MQuqF9
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
ஜவான் அதிரடி ப்ரிவ்யூ மற்றும் வசீகரிக்கும் கேரக்டர் போஸ்டர்களால் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது, படத்தின் முதல் பாடலான ‘வந்தா எடம்’ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அட்டகாசமான விஷுவல்கள் மற்றும் SRK அசத்தலான நடனம் என இந்தி (ஜிந்தா பந்தா), தமிழ் (வந்த எடம்) மற்றும் தெலுங்கு (தும்மே துலிபேலா) ஆகிய மொழிகளில் இந்த பாடல் நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆள்கிறது.
இந்த ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.