‘ஆண்தேவதை’ திரைப்படம் வெளியிட தடை

சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன் இணைந்து நடித்து தாமிரா காதர் மொய்தீன் இயக்கியுள்ள படம் ஆண் தேவதை. இன்று வெளியாக இருந்த நிலையில் இப் படத்தை  வெளியிடக்கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நிஜாம் மொய்தின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ஆண் தேவதை’ படத்திற்காக தயாரிப்பாளர் முகமது பக்ரூதின் தன்னிடம் 37 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும் அதில் 15 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்திய நிலையில், பாக்கித்தொகை 22 லட்ச ரூபாயை பட வெளியீட்ற்கு முன்னர் திருப்பி செலுத்துவதாகவும் வாக்குறுதியளித்திருந்ததை மீறியதால் பணத்தை திருப்பி செலுத்திவிட்டு படத்தை வெளியிடவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஆர்.ஜோதி,  படத்தின் தயாரிப்பாளர் முகமது பக்ரூதின் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.