அட்டக்கத்தி படத்தின் மூலமாக சினிமா ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ள நந்திதா ஸ்வேதா IPC 376 என்ற மாஸ் கமர்சியல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ள நந்திதா ஸ்வேதாவை இப்படத்தின் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சூப்பராயன் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் அவர் கூறும்போது நடிகை விஜயசாந்திக்கு பிறகு சண்டைகாட்சிகளில் மிகவும் துணிச்சலாக, சிறப்பாக நடித்த நடிகை நந்திதா ஸ்வேதா தான் என கூறினார்.
ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்து கதை, திரைக்கதை எழுதி IPC 376 படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது.
பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் IPC 376 படத்தை தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிந்துள்ளது.