IPC 376 த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை. நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி பண்ணுகிறார்.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை.இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள்.ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது.பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.
த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார்.தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபல விநியோகஸ்தர்.96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். இயக்குநர் சொன்ன கதையை நம்பி தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.