அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த ஐசரி K. கணேஷ்!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் Dr.ஐசரி K. கணேஷ், பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் திரு. செந்தில் தியாகராஜன், துணைத் தலைவர் திரு. ராமசுப்ரமணி, இணை செயலாளர் திரு. தமிழ் செல்வன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் திரு. அதுல்யா மிஸ்ரா, ஐஏஎஸ் அவர்கள்.