‘தி லெஜண்ட்’ படத்தின் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டில் ரெய்ட்!

கோலிவுட்டின் பிரபல ஃபைனான்ஸியர் அன்புச்செழியன். இவரிடம் கடன் வாங்கி படம் தயாரிக்காத தயாரிப்பாளர்கள் ஓரிருவர் மட்டுமே. படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்வதோடு மட்டுமின்றி, தன்னுடைய ‘கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம்’ மூலம் படங்களை தயாரித்தும்,  விநியோகம் செய்தும் வருகிறார்.

அண்மையில், சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம்  ‘தி லெஜண்ட். சுமார் 30 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. அன்புச்செழியன் இப் படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இருவருக்குமிடையே நடந்த பணப் பரிவர்த்தனையில் சில ஆவணங்கள் வரிமான வரித்துறையினரிடம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  அன்புச்செழியன்  சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.