‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்க, PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனைந்துதயாரிக்கும் படம் ‘தேஜாவு’.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அருள்நிதி நடித்துள்ள இந்தப்படத்தினை, அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார்.

மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். ‘மைம்’ கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.

‘தேஜாவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்க்கு,  PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் E சித்தார்த் படத்தொகுப்பை கையாண்டு வருகிறார். பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சியாளராகவும், வினோத் ரவீந்திரன் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர்.