எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”!

எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்” (It’s Just a Beginning).

‘கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு’ தான் இப்படத்தின் கதை . கதாநாயகனாக ஜீவா சுந்தர் மற்றும் கதாநாயகியாக நிரஞ்சனா அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரித்திகா ,லிசி ஆன்டனி , ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி ,பேபி ஷைனி , அம்பேத்கார், ராஜேஸ்வரன் ,நிவேஷ், அட்சயா ஆகியோர் அறிமுகமாகின்றனர் .

இத்திரைப்படம் திருச்சி ,பெரம்பலூர் ,கீரனூர், அரியலூர் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது .

இசையமைப்பாளர் வசந்த் கைவண்ணத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் பல திருப்பங்கள் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது .