மதுரை, பாண்டி கோவிலில் நடந்த, ‘ஜெய் தேவ்’ படத்தின் பூஜை!

ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய், அஜித் முன்னணி நடிகர்களின் எத்தனை படங்கள் வந்தாலும் தமிழ்சினிமாவை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வணிக ரீதியில் மிகப்பெரும் வெற்றியடையும் படங்கள் மட்டுமே! அதற்கு சமீபத்திய உதாரணம் லவ்டுடே!

சினிமாவின் உள்ள தீராக்காதலால் சிறிய பட்ஜெட்டில் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இன்று காலை மதுரை, பாண்டி கோவிலில் ‘ஜெய் தேவ்’ படத்தின் முதல் பகுதிக்கான திரைக்கதை எழுதி முடித்ததை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இயக்குனர் ‘மதுரை’ கனகு படத்தின் பாடல் ஆசிரியர் கவிஞர் கூபா. நாகராஜன், மதுரை நடிகர் சங்கத்தின் பொருளாளர் விஜயலட்சுமி, செய்தி தொடர்பாளர் மணிகண்டன், ஜஸ்டின், மீனாட்சி, நித்யஸ்ரீ மற்றும் பூசாரி ராஜபாண்டி ஆகியோர் பாண்டி கோவிலில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.