ஜோதிகா – சசிகுமார் இணையும் புதிய படம் ஆரம்பம்!

Jyothika teams up with Sasikumar

தமிழ் சினிமாவின் தரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ‘2 டி எண்டெர்டெயின்மெண்ட்’. தங்களது தயாரிப்புகளில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்குடன் நல்ல மெஸேசையும் சொல்லி வருகிறது.

அந்த வரிசையில்  ‘2 டி எண்டெர்டெயின்மெண்ட்’.  நிறுவனம், கிராமத்து பின்னணியில் உறவுகளின் வலிமையை எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.

இதில், சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத படத்தின் துவக்க விழா பூஜை, இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் நடந்தது..

இந்த துவக்க விழா பூஜையில், சிவகுமார், ‘2 டி எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனரும், தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், ‘2 டி எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு,  ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர்  B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.