‘கார்த்தி, ரஜினி சார் மாதிரி!’  ஜோதிகா

Thambi Tamil  action thriller film. Directed by Jeethu Joseph, starring Karthi, Jyothika and Sathyaraj in the lead roles.

கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கார்த்தி, ஜோதிகா நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் ‘தம்பி’.

கார்த்தி, ஜோதிகா அக்கா – தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். மலையாள பட இயக்குநர் ஜீத்து ஜோசப் தமிழில் இயக்கும் முதல் படம் ‘தம்பி’.

இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி நடித்துள்ளார்.

‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பின்னரும், ஜோதிகா இப்படத்தில் நடித்திருப்பதாலும் ‘தம்பி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

“தம்பி” படத்தின் இசை வெளியீட்டின் போது ஜோதிகா படம் குறித்து பேசியிருப்பதாவது…

‘அப்பா அம்மா முன்னாடி மேடையில் தமிழ் பேசறதுக்கு எனக்கு பயம். தம்பி எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம்.

என் அம்மா ஒரு நாள் ஷூட்டிங் வந்தாங்க. அவங்கள நான் சாப்பிடுங்கனு சொன்னேன் ஆனா அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் என்னோட பையன் படத்திற்கு வந்துருக்கேன்னு சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு.

கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. அவரோட எல்லாப்படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார்.

ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் காத்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார்.

சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம் வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள் அம்மா நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீன்ங்கனு கேட்டாங்க. அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். அவர் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது.

கோவிந்த் வசந்தா மியூஸிக் என்னோட ஃபேவரைட். சூப்பரான மியூஸிக் தந்திருக்கார். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி’.  என்றார் ஜோதிகா.