சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் . இயக்குநர் வெற்றிமாறன்.
இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் , இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று படித்து முடித்த மாணவர், மாணவிகளில், வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ, அவர்களுக்கு தனது ‘V Creations’ நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
‘நாம் அறக்கட்டளை’யை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜா நாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .