கள்வா குறும்படமாக மாறிய ‘ஹவுஸ் அரெஸ்ட்’ சிறுகதை!

‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர், ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

கள்வா குறும்படத்தை மர்யம் தியேட்டர்ஸ் வழங்க,  இயக்குனர் ஜியா இயக்குகிறார்.  இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரியர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘கள்வா’ குறித்து இயக்குனர் ஜியா பேசியதாவது..

‘இது ரொமான்டிக் திரில்லர் படம். வழக்கமான குறும்படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு ஃபீச்சர் ஃபிலிம் போலவே இருக்கும். இதில் எந்த கருத்தும் கூறவில்லை. முழுக்க முழுக்க என்டர்டெயினர் தான். ‘கள்வா’ என்பதற்கு திருடன் என்று அர்த்தம் என சிலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். கள்வா என்றால் மனதை கொள்ளையடித்தவன் என்று பொருள். இது சங்க இலக்கியத்திலிருந்து எடுத்த தலைப்பு. இந்த கதைக்கு இந்த தலைப்புதான் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர்கள் சுபாவும் தெரிவித்தார்கள்.

எழுத்தாளர் அப்சல் எழுதிய ‘ஹவுஸ் அரெஸ்ட்’ என்ற சிறுகதையின் ‘நாட்’ எடுத்துக்கொண்டு, இதற்கு நான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். இதில் ஹீரோவாக ‘181’ உள்பட சில படங்களில் நடித்துள்ள விஜய் சந்துரு நடித்திருக்கிறார். மாடலும் குறும்பட நடிகையுமான அட்சயா ஜெகதீஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனது படக்குழுவை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஷரண், இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், எடிட்டர் பிரேம், இணை இயக்குனர் ரெங்கா, உதவி இயக்குனர்கள் செல்வா, திலீப் உள்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த குறும்படத்தை ஃபீச்சர் ஃபிலிமாக எடுத்தால் கார்த்தி ஹீரோவாகவும் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். காரணம், இந்த கதைக்கு அவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள். இந்த குறும்படத்துக்கு மீடியாவின் ஆதரவு தேவை. உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.