கலைஞர் ‘100’ விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு!

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள கலைஞர் நூறு விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு கலைஞானி கமலஹாசன் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்தனர். நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக திரு.கமலஹாசன் அவர்கள் உறுதி அளித்தார்.