‘என்னென்ன சொல்றான் பாருங்க… கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான்!’ பொய்யில் புரளும் மனிதர்களுக்கு சொல்லப்படுகிற இந்த டைலாக்கில் இருந்து உருவாகியிருப்பது தான், ‘கம்பி கட்டுன கதை’ படம்.
நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ்ஜின் முந்தைய, சூப்பர் டூப்பர் ஹிட்டான சதுரங்க வேட்டை படத்தின் உதவியுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பொய்யும் புளுகுமா, மக்களிடம் பணம் பறித்து வருபவர் நாயகன் நட்டி நட்ராஜ். அவருடைய அசாத்தி பேச்சுத்திறமையினால், யாரை வேண்டுமானாலும் எளிதில் ஏமாற்றி விடுவார்.
வெளிநாட்டிலிருந்து வைரம் கடத்தி வந்த ஒரு கும்பல். ஏர்போர்ட்டில் அதை கை நழுவ விடுகிறது. அந்த வைரத்தை கைப்பற்ற ஜெகஜால கில்லாடி நட்டி நட்ராஜை ஒரு கும்பல் நியமிக்கிறது. வைரத்தை கடத்தும் அவர், அந்த கும்பலை ஏமாற்றிவிட்டு ஒரு அரசியல்வாதியின் நிலத்தில் புதைத்து வைக்கிறார். மிக விலையுயர்ந்த அந்த வைரத்தை இறுதியில் யார் கைப்பற்றினார்கள் என்பது தான், இந்த கம்பி கட்டுன கதை.
நாயகன் நட்டி நட்ராஜ், சதுரங்க வேட்டை படத்திலேயே மோசடி மன்னன் வேடத்தில் நடித்ததால், இந்த கதாபாத்திரத்தில் பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. நன்றாகவே நடித்துள்ளார்.
இன்னொரு கட்டுமஸ்தான நாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் கமர்ஷியல் அயிட்டங்களுக்கு பயன்பட்டுள்ளனர்.
சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், ‘ஜாவா’ சுந்தரேசன் ஆகியோரின் காமெடிகளோ, காட்சிகளோ பெரிதளவில் ஈர்க்கவில்லை. ஒரு சில இடங்களில் லேசான சிரிப்பினை வரவழைக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜெய் சுரேஷ். இசையமைத்து இருக்கிறார், சதீஷ் செல்வம்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜநாதன் பெரியசாமி, முழுமையான ஒரு நகைச்சுவை படத்தினை கொடுக்க முயற்சித்துள்ளார். லாஜிக்கில்லாமல் படம் பார்ப்பவர்களுக்கு, இந்தப்படம் பிடிக்கும்.
மொத்தத்தில், ‘கம்பி கட்டுன கதை’ –