குடும்பத்துடன் கொண்டாட வருகிறது முனி 4- காஞ்சனா 3

பேய் படங்கள் என்றாலே பயந்து ஓடிய குழந்தைகளையும், பெண்களையும் ஆர்வமுடன் தியேட்டருக்கு வரவழைத்தவர் ராகவா லாரன்ஸ். பேய் படங்களின் வரிசையில் இவர் இயக்கிய முதல் படமான முனி பலத்த வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாக பெரும் வெற்றிபெற்ற படம்..

முனி வரிசையில் தொடர்ந்து வெளிவந்த இவருடைய அணைத்து படங்களுமே பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. அதில் கடைசியாக வெளியான முனி 3 – காஞ்சனா 2 படம் சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது.

ஓவியா, வேதிகா ஆகியோருடன் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படம் முனி4- காஞ்சனா 3. மிகபிரமாண்டமான செலவில் உருவாகிவரும் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியைத்தவிர மற்ற அனைத்து விதமான படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது. எதிர் வரும் கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட வருகிறது முனி 4- காஞ்சனா 3 .