புன்னகை மன்னன் படத்தில், சிங்களராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர், மதுரையைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி. அதன் பிறகு வேலைக்காரன், பத்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், கடந்த சில மாதங்களாக ரத்தப்புற்று நோய் பாதிப்பால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 60. ஷிகான் ஹூசைனியின் மரணத்திற்கு, சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷிகான் ஹூசைனியின் உடல், சென்னை, பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான மதுரையில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..