‘வலசு’ என்பது மிக கனிசமான குடியிருப்புகளும், அதனை சுற்றி குறு விவசாயம் செய்யும் இடங்களையும் குறிக்கும்.
‘Crew 21’ Entertainment நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கருப்பங்காட்டு வலசு’. எழுதி இயக்கியிருப்பவர் செல்வேந்திரன். இதில் எபிநேசர் தேவராஜ், நீலிமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லதுரை, கௌரிசங்கர், ஜிதேஷ் டோணி,சந்தியன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
சுமார் 200 பேரை கொண்ட, ஒரு மிகச்சிறிய ஊர் கருப்பங்காட்டு வலசு. இந்த ஊர் தலைவரின் மகள் காந்திமதி (நீலிமா இசை) தன்னுடைய ஊரில் கழிப்பறை உள்ளிட்ட, அத்தியாவசிய அடிப்படை வசிதிகளையும், ஆரம்ப கல்வி, கணினி கல்வி வசதியினையும் சிலரது எதிர்ப்பினை மீறி கொண்டு வருகிறார். மக்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து சிலர் மர்மான முறையில் இறந்து விடுகின்றனர்.
காவல் ஆய்வாளர் (ஜார்ஜ் விஜய்) இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடிப்பது தான் கருப்பங்காட்டு வலசு படத்தின் சஸ்பென்ஸ் திரைக்கதை.
படத்தின் முதல் பாதியில் சுவாரஷ்யமற்ற திரைக்கதை நம்மை சோர்வடைய செய்கிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் செல்வேந்திரனின் சாமார்த்தியமான திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது.
எபிநேசர் தேவராஜ், நீலிமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லதுரை, கௌரிசங்கர், ஜிதேஷ் டோணி,சந்தியன் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் இயக்குனரின் தேவைக்கேற்ப நடித்துள்ளனர்.
சிறிய தயாரிப்பில் அவ்வப்போது வெளிவரும் சில படங்கள் தனி கவனத்தை பெற்றுவிடுவது உண்டு. அந்த வரிசையில் ‘கருப்பங்காட்டு வலசு’ கவனத்தை பெறுகிறது.