ஆர்.கண்ணனின் ‘காசேதான் கடவுளடா’ வரவேற்பை பெறுமா?

சித்ராலாயா கோபுவின் கதை, வசனம், இயக்கத்தில் 1970 ஆண்டு ‘யூனிட்டி கிளப்’ சார்பில் அரேங்கேற்றபட்ட நாடகம் தான், காசேதான் கடவுளடா. இதில் முத்துராமன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

காசேதான் கடவுளடா, நாடகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ‘AVM’ நிறுவனம் இதனைத் திரைப்படமாக தயாரிக்க முன் வந்தது. அதில் நாடகத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் மேலும் சிலர் சேர்ந்து நடித்தனர். இதன் மூலம் ‘சித்ராலயா’ கோபு திரைப்பட இயக்குனராக அறிமுகமானார், என்பது குறிப்பிடத்தக்கது.

‘சித்ராலயா’ கோபு இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், மனோரமா, முத்துராமன், லக்‌ஷ்மி, சுருளிராஜன் என, அதில் நடித்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தனி முத்திரை பதித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.

2015 ஆண்டு, தேங்காய் சீனிவாசன் நடித்த ‘அப்பாசாமி டீ ஸ்டால்’ ஓனர், கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது குழுவினரும்  காசேதான் கடவுளடா, நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினர். அது பெரும் வரவேற்பினை பெற்றது.

பலரும், ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை ரீமேக் செய்ய தயங்கிய நிலையில் கண்டேன் காதலை, சேட்டை, பிஸ்கோத், தள்ளிப் போகாதே, கிரேட் இண்டியன் கிச்சன் வரிசையில் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை, அதே பெயரில் ரீமேக் செய்துள்ளார், இயக்குனர் ஆர்.கண்ணன்.

‘காசேதான் கடவுளடா’( 2023 )திரைப்படத்தில் ஷிவா, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, புகழ், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1972 ஆம் ஆண்டு வெளிவந்த, கிளாசிக் காமெடி ஹிட் படமான ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, விரவில் வெளியாகவுள்ள இந்த ரீமேக் திரைப்படத்திற்கும் கிடைக்குமா?