‘காசே தான் கடவுளடா’ ரிலீஸுக்கு ரெடி!

முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நடிப்பில், 1972 ஆம் ஆண்டு வெளிவந்த கிளாசிக் காமெடிப்படம் ‘காசே தான் கடவுளடா’.

ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் தயாரித்து, சித்ராலயா கோபு இயக்கிய இந்தப்படத்தினை, Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர் கண்ணன், அதே பெயரிலேயே ரீமேக் செய்து தயாரித்து, இயக்குகிறார்.

“காசே தான் கடவுளடா” படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

“காசேதான் கடவுளடா”படம் குறித்து தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் கூறியதாவது…

“காசேதான் கடவுளடா”படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜுலை 16 ல் துவங்கியது. திட்டமிட்டபடி அனைவரின் ஒத்துழைப்போடு படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடத்தப்பட்டது.

விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும்.இந்தக்காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் செய்துள்ளேன். ஒரு ஜாலியான என்டர்டெயினரா இருக்கும்’ என்றார்.