மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மாடர்ன் டெக்னாலஜி! – மன்சூரலிகான்

பிரபல வில்லன் நடிகர் மன்சூரலிகான் தனது ‘ராஜ்கென்னடி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கடமான்பாறை’.

‘கடமான்பாறை’ படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, ‘கனல்’ கண்ணன், போண்டாமணி, ‘பயில்வான்’ ரங்கநாதன், ‘லொள்ளுசபா’ மனோகர், வெங்கல் ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘கடமான்பாறை’ படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது…

‘நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக ‘ கடமான் பாறை’ உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. என்றார்

‘கடமான்பாறை’ படம் இம்மாதம் 23 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.